ஆதரவற்றோருக்கு நிதி திரட்ட நடிகை ஸ்ரீதேவி புடவை ஏலம்

கடந்த வருடம் பிப்ரவரியில் துபாய்க்கு திருமணத்திற்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் முதல் வருட திதி சடங்குகளை சமீபத்தில் அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர். தற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் பலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஆதரவற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவியின் புடவை ஒன்று ஏலம் விடப்படுகிறது. இணையதளம் மூலம் இந்த ஏலம் நடக்கிறது. குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ.40 ஆயிரம்
 

கடந்த வருடம் பிப்ரவரியில் துபாய்க்கு திருமணத்திற்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் முதல் வருட திதி சடங்குகளை சமீபத்தில் அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர்.

ஆதரவற்றோருக்கு நிதி திரட்ட  நடிகை ஸ்ரீதேவி புடவை ஏலம்

தற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் பலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஆதரவற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவியின் புடவை ஒன்று ஏலம் விடப்படுகிறது. இணையதளம் மூலம் இந்த ஏலம் நடக்கிறது. குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ.40 ஆயிரம் நிர்ணயித்து உள்ளனர். ஏலத்தின் மூலம் வசூலாகும் தொகையை ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு போனிகபூர் வழங்குகிறார்.

From around the web