சினிமா வரலாற்றில் முதல் முறையாக 2 நாள் முன்பே ஸ்பெஷல் ஷோ- நேர் கொண்ட பார்வை

அஜீத் நடிப்பில் , ஹெச் வினோத் இயக்கத்தில் வரும் 8ம் தேதி வரவிருக்கும் படம் நேர் கொண்ட பார்வை. பிங்க் பட ரீமேக்கான இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் அஜீத் ரசிகர்களை பற்றி சொல்லவா வேண்டும். படம் எப்போது வரும் என வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ எனப்படும் பிரத்யேக காட்சி இன்றே சிங்கப்பூரில் துவங்குகிறது. இன்று காலை 9மணியளவில் சிங்கப்பூரில் இப்படத்தின் பிரத்யேக காட்சிகள் துவங்குகிறது. இதுவரை வந்த
 

அஜீத் நடிப்பில் , ஹெச் வினோத் இயக்கத்தில் வரும் 8ம் தேதி வரவிருக்கும் படம் நேர் கொண்ட பார்வை. பிங்க் பட ரீமேக்கான இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் அஜீத் ரசிகர்களை பற்றி சொல்லவா வேண்டும். படம் எப்போது வரும் என வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக 2 நாள் முன்பே ஸ்பெஷல் ஷோ- நேர் கொண்ட பார்வை

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ எனப்படும் பிரத்யேக காட்சி இன்றே சிங்கப்பூரில் துவங்குகிறது. இன்று காலை 9மணியளவில் சிங்கப்பூரில் இப்படத்தின் பிரத்யேக காட்சிகள் துவங்குகிறது.

இதுவரை வந்த தமிழ் சினிமாவுக்களின் பிரத்யேக காட்சி முதல் நாள்தான் விஐபி பார்வையாளர்களுக்கு காட்டப்படும். இந்த படத்துக்கு மட்டும் முதல் முறையாக 2 நாள் முன்பே காண்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரையிடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், “இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் இன்று ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடல் ஆரம்பிக்கிறது. எனது மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார், ஹெச் வினோத், ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

From around the web