பாலாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர்: ஷிவானியை காப்பாற்றுவாரா?

 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் நடைபெற்ற நிலையில் இந்த டாஸ்க்கில் அதிக மதிப்பெண்களை பெற்று இருந்தவர் பாலா என்பது நேற்று தெரியவந்தது. இதனை அடுத்து அவருக்கு பிக்பாஸ் ஸ்பெஷல் பவரை கொடுத்துள்ளார் 

இந்த ஸ்பெஷல் பவரின் தன்மை என்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த பவரை வைத்து நாமினேஷனில் உள்ள ஒருவரை காப்பாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

bala power

இந்த வாரம் பாலா நாமினேஷனில் இருந்தாலும் அவர் கண்டிப்பாக பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தப்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஒரு வேளை ஷிவானி டேஞ்சர் ஜோனில் இருந்தால் அவரை காப்பாற்ற பாலாஜி ஸ்பெஷல் பவரை பயன்படுத்துவாரா அல்லது ஆஜித்துக்கு பயன்படுத்துவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

ஷிவானி ஒருவேளை வாக்குகளிலேயே தப்பித்துவிட்டால் அவர் ஆஜித்தை காப்பாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த வாரம் அர்ச்சனாவை வெளியேற்ற பார்வையாளர்களும் சரியாக போட்டியாளர்களும் சரி, கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web