பின்னாடி புறம் பேசுவது, முன்னாடி மன்னிப்பு கேட்பது: என்ன பாலா இது?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஆரி குறித்து பாலாஜி கூறிய வார்த்தைகள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆரி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரம்யா மற்றும் ஆஜித்துடன் பாலாஜி தெரிவித்துக் கொண்டிருந்தார். இதுதான் தனித்தன்மையுடன் விளையாடுவது வந்தால் அந்த தனித்தன்மையை எனக்கு தேவையில்லை என்றும் நான் குரூப்பிஸமாகவே இருந்து கொள்கிறேன் என்றும் அவர் கேலியும் கிண்டலும் செய்தார் 

இந்த நிலையில் ஒரு பக்கம் ஆரியை கேலி செய்து பேசிய பாலாஜி இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் ஆரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நான் இந்த வீட்டில் வந்ததிலிருந்து இரண்டு பேருடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் முதலில் ஆரி, இரண்டாவது ரியோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

aari rio

இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் கீழே இருந்துதான் மேலே வந்து இருக்கின்றோம் என்றும் ஒருவரை ஒருவர் இழுத்துப் பிடித்து தள்ளி கொள்ளாமல் ஒருவர் கைப்பிடித்து ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் 

மேலும் நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்தவர்கள் என்றும் ஆனால் நான் இனிமேல் தான் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்றும் உருக்கமாக பேசியுள்ளார். நேற்று ஆரியை புறம் பேசி விட்டு இன்று ஆரியிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து ரசிகர்கள் ’என்ன பாலாஜி இது? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்

From around the web