எஸ்பிபி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: பிரார்த்தனை பலித்ததாக கொண்டாட்டம்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வந்தாலும் நேற்றும், நேற்று முன்தினமும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் இன்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பிபி அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக
 

எஸ்பிபி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: பிரார்த்தனை பலித்ததாக கொண்டாட்டம்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வந்தாலும் நேற்றும், நேற்று முன்தினமும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் இன்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பிபி அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்

மேலும் எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனை பலித்து விட்டதாகவே கருதப்படுகிறது

From around the web