அப்பாவை பற்றி சொல்வதற்கு கணிசமான தகவல்கள் உள்ளது: எஸ்பிபி சரண் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த் சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தினமும் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பதிவு செய்து வருகிறார். அந்த் வகையில் சற்றுமுன் அவர் பதிவு செய்த வீடியோவில் கூறியிருப்பதாவது நேற்று நான் எந்தவித பதிவுவையும் பகிரவில்லை. ஆனால் இன்று உங்களிடம் சொல்வதற்குக் கணிசமான தகவல்கள் இருக்கின்றது என்பதால் இதனை பதிவிடுகிறேன். முதலில், என் அம்மா
 

அப்பாவை பற்றி சொல்வதற்கு கணிசமான தகவல்கள் உள்ளது: எஸ்பிபி சரண் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த் சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தினமும் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பதிவு செய்து வருகிறார். அந்த் வகையில் சற்றுமுன் அவர் பதிவு செய்த வீடியோவில் கூறியிருப்பதாவது

நேற்று நான் எந்தவித பதிவுவையும் பகிரவில்லை. ஆனால் இன்று உங்களிடம் சொல்வதற்குக் கணிசமான தகவல்கள் இருக்கின்றது என்பதால் இதனை பதிவிடுகிறேன்.

முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு அவர் நன்றாகத் தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதனை சொல்கிறேன். வீட்டுக்குத் திரும்பிவிட்டார். மருந்துகள் சாப்பிட்டு வருகிறார்.

நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அப்பா ஃபிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்”

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

From around the web