பூந்தமல்லியில் தோன்றும் இளையராஜா -எஸ்.பிபி

இளையராஜா இசையமைத்த பாடல்களில் அதிகபட்ச பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி இருவரும் இணைந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பல பாடகர்கள் பாடி இருந்தாலும் அவர்கள் பல்வேறு சாதனைகள் செய்து இருந்தாலும் எஸ்.பி.பி பாடல்கள் இளையராஜா இசைக்கு பிரதானம். திருமண விருந்தில் பல்வேறு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டிருந்தாலும் பாயாசமும் சேர்த்து பரிமாறினால்தான் அந்த விருந்து சிறக்கும். அது போல் இளையராஜா தரும் ராஜவிருந்தில் பலசுவை இருந்தாலும் இனிப்பு சுவை தரும் பாயாசம் எஸ்.பி.பி பாடல்கள் ஆகும் சில
 

இளையராஜா இசையமைத்த பாடல்களில் அதிகபட்ச பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி இருவரும் இணைந்து பல சாதனைகள் புரிந்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பல பாடகர்கள் பாடி இருந்தாலும் அவர்கள் பல்வேறு சாதனைகள் செய்து இருந்தாலும் எஸ்.பி.பி பாடல்கள் இளையராஜா இசைக்கு பிரதானம்.

பூந்தமல்லியில் தோன்றும் இளையராஜா -எஸ்.பிபி

திருமண விருந்தில் பல்வேறு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டிருந்தாலும் பாயாசமும் சேர்த்து பரிமாறினால்தான் அந்த விருந்து சிறக்கும். அது போல் இளையராஜா தரும் ராஜவிருந்தில் பலசுவை இருந்தாலும் இனிப்பு சுவை தரும் பாயாசம் எஸ்.பி.பி பாடல்கள் ஆகும்

சில வருடங்களாக இசைஞானி இளையராஜாவுக்கும், எஸ்.பி.பிக்கும் ராயல்டி விவகாரத்தில் இருந்த மனக்கசப்பு அனைவரும் அறிந்த விசயங்களேயாகும். ரசிகர்களுக்கு மிக மனவருத்தத்தை அளித்த இவ்விவகாரம், இப்போது முற்றிலும் தீர்ந்துவிட்டது.

இதையொட்டி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் வரும் ஜூன் 2 ல் வருகிறது இதற்காக
சென்னை பூந்தமல்லி அருகே பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர். ராயல்டி பிரச்சினையால் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒரே மேடையில் இருவரும் தோன்ற உள்ளது இசை ரசிகர்களுக்கு, பேரின்பத்தை கொடுத்துள்ளது.

From around the web