எஸ்பிபி உடல்நிலை தேறியதா? எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சென்னை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய தந்தையின் உடல்நிலை நேற்று போலவே இன்றும் சீராக உள்ளது. எந்தவிதமான கூடுதல் பிரச்சனையும் அவரது உடல்நிலையில் இல்லை என்றும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள்
 

எஸ்பிபி உடல்நிலை தேறியதா? எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சென்னை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய தந்தையின் உடல்நிலை நேற்று போலவே இன்றும் சீராக உள்ளது. எந்தவிதமான கூடுதல் பிரச்சனையும் அவரது உடல்நிலையில் இல்லை என்றும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் எஸ்பிபி அவர்களின் உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய சரண், கடவுள் நிச்சயம் நல்லதே செய்வார் என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

முன்னதாக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, உள்பட ஒட்டுமொத்த திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

#Spb heathupdate 17/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

From around the web