48 மணி நேரத்திற்கும் மேலாக சீராக உள்ளது எஸ்பிபி உடல்நிலை: எஸ்பிபி சரண் அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே அவரது உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன் கவலைக்கிடமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோ ஒன்றில் கூறியபோது ’கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபியின் உடல்
 

48 மணி நேரத்திற்கும் மேலாக சீராக உள்ளது எஸ்பிபி உடல்நிலை: எஸ்பிபி சரண் அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே

அவரது உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன் கவலைக்கிடமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது

இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோ ஒன்றில் கூறியபோது ’கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபியின் உடல் நிலை கடந்த 48 மணிநேரமாக சீராக உள்ளது என்றும் எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையின் பலனாக எஸ்பிபி அவர்கள் கண்டிப்பாக இந்த நோயிலிருந்து மீண்டு வருவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாக்டர்களின் அறிவுரையின்படி சென்னை மருத்துவர்கள் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web