நடிகர் திலகத்துடன் எஸ்பிபி: காணக்கிடைக்காத அரிய புகைப்படம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலையை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருந்தாலும் இன்று சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் எஸ்பிபி குறித்த பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவைகளில் ஒருசில புகைப்படங்கள் இதுவரை ரசிகர்கள் காணாத அரிய புகைப்படங்கள் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சிவாஜி கணேசன்
 

நடிகர் திலகத்துடன் எஸ்பிபி: காணக்கிடைக்காத அரிய புகைப்படம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலையை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருந்தாலும் இன்று சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் எஸ்பிபி குறித்த பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவைகளில் ஒருசில புகைப்படங்கள் இதுவரை ரசிகர்கள் காணாத அரிய புகைப்படங்கள் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவாஜி கணேசன் நடித்த ’சுமதி என் சுந்தரி’ என்ற திரைப்படத்தில் எஸ்பிபி ஒரு பாடலைப் பாடினார். ‘பொட்டு வைத்த முகமோ’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது சிவாஜி கணேசன், எஸ்பி பாலசுப்பிரமணியம் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எஸ்பிபி என்றாலே அவரது குண்டான உடல் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த புகைப்படத்தில் அவர் நடுத்தர உடல் எடையுடன் சிவாஜிகணேசன் அருகில் உட்கார்ந்து சிரித்துக்கொண்டு பேசி இருப்பது போல் உள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது மிக அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web