சத்தியராஜ் நடிப்பில் வேற மாறி கலக்க வரும் சூது கவ்வும் பார்ட் 2

சத்யராஜ் நடிக்கவுள்ள சூது கவ்வும் இரண்டாம் பாகம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது.  2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். சி.வி.குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 

 

இந்நிலையில் தற்போது சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளாராம். வித்தியாசமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தை, யங் மங் சங் படத்தை இயக்கியுள்ள அர்ஜுன் இயக்குகிறார். 

மேலும் இப்போது சூது கவ்வும்-2 திரைப்படம் குறித்து மற்றுமொரு மாஸ் தகவல் தெரிய வந்துள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். நிச்சயம் இது சூது கவ்வும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

From around the web