செம பஞ்ச்... வாக்கு பதிவில் சூரி சொன்ன மெசேஞ்!

“என் மையும் நன் மை செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்து விட்டேன்”
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்த நடிகர் சூரி, வேற லெவல் பஞ்ச் மெசேஜூடன் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களின் மூலம் அறியப்பட்டவர். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் படங்களில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி இப்போது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து நேரத்தை கழிக்க வேண்டியதாக இருந்தது. அப்போதுதான் தமது குடும்பம், குழந்தைகள் என நாளும் பொழுதும் வீடியோக்களை எடுத்து தமது சோஷியல் மீடியாவில் பதிவிட்ட சூரிய மக்களுடன் இன்னும் நேரடியாக நெருக்கமானார்.

இந்நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டுள்ள சூரி,  “என் மையும் நன் மை செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாக்கை பதிவு செய்து விட்டேன்” என பஞ்ச்சாக ஒரு மெசேஜை பதிவிட்டுள்ளார். சூரியின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.


 

From around the web