நடிகர் விமல், சூரிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்: என்ன காரணம்?

கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் காரணத்தினால் கொடைக்கானலுக்கு வெளி மாவட்டத்தினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி மற்றும் நடிகர் விமல் உள்ளிட்ட சிலர் விதிமுறைகளை மீறி கொடைக்கானல் வந்துள்ளதாக தெரிய வந்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சென்னையில் இருந்து நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர்கள் கொடைக்கானலில் உள்ள ஏரி ஒன்றில் மீன்களை பிடித்து சமைத்து சாப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக
 

நடிகர் விமல், சூரிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்: என்ன காரணம்?

கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் காரணத்தினால் கொடைக்கானலுக்கு வெளி மாவட்டத்தினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி மற்றும் நடிகர் விமல் உள்ளிட்ட சிலர் விதிமுறைகளை மீறி கொடைக்கானல் வந்துள்ளதாக தெரிய வந்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சென்னையில் இருந்து நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர்கள் கொடைக்கானலில் உள்ள ஏரி ஒன்றில் மீன்களை பிடித்து சமைத்து சாப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து சூரி மற்றும் விமல் ஆகியோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை கொடைக்கானலில் அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியபோது ’தடையை மீறி ஏரி பகுதிக்கு சென்றவர்களுக்கும், அங்கு மீன் பிடித்த சாப்பிட்ட அனைவருக்கும் ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அவர்களும் அபராத பணம் கட்டி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்

From around the web