அரசியலில் ஈடுபட அழைப்புகள் வருகின்றன ..  சோனுசூட் பேட்டி!!

சோனு சூட் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார். அதாவது, “அரசியலில் நான் ஈடுபட வேண்டும் என்று பல வகையிலும் அழைப்புகள் வருகின்றன.

 

தமிழில் சந்திரமுகி மற்றும் ஒஸ்தி படங்களின் மூலம் மக்கள் மத்தியில் அறியப் பெற்றவர் நடிகர் சோனுசூட். இவர் பாலிவுட் திரையுலகில் பெரிய நடிகராக வலம் வந்தாலும், தமிழ் சினிமாவில் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை.

இருப்பினும் இவர் கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகிப் போனார்.

அதற்குக் காரணம் கொரோனா காலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊரில் சேர்க்க முடியாமல் அரசாங்கம் தத்தளித்த நிலையில் சோனுசூட் தாமாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் நடை பயணமாகவும், மிதிவண்டியிலும் என்று பயணம் மேற்கொண்ட மக்களுக்கு உதவியதே ஆகும்.

அவர் விமானம், பேருந்து, இரயில் என அனைத்து வகையிலும் பல ஆயிரக்கணக்கிலான மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பினார். இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பெரிய அளவில் கொண்டாடப் பட்டார்.

இந்தநிலையில் சோனு சூட் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார். அதாவது, “அரசியலில் நான் ஈடுபட வேண்டும் என்று பல வகையிலும் அழைப்புகள் வருகின்றன.

இப்போது நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் அரசியலில் ஈடுபடுவது குறித்த எண்ணம் ஏதும் இல்லை, அரசியலில் ஈடுபட்டால், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படுவேன்”என்று கூறியுள்ளார்.

From around the web