பிரபல இசையமைப்பாளரின் 6 வயது மகன் கம்போஸ் செய்த பாடல்!

 

தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் 'வாகை சூடவா' முதல் 'க/பெ ரணசிங்கம்’ வைரை பல வெற்றி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பதும் அவர் இசையமைத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் சுமார் ஆறு திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது மகனையும் இசைத் துறையில் களம் இறக்கியுள்ளார். ஜிப்ரானின் ஆறு வயது மகன் ஒரு பாடலை கம்போஸ் செய்து பாடி உள்ளதாகவும் இந்த பாடலை நவம்பர் 13ஆம் தேதி குழந்தைகள் தின சிறப்பு பாடலாக வெளியீடு திட்டமிடப் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

gibran son

மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புரோமோ வீடியோவில் ‘மாஸ்க்க காணும்’ என்ற தொடங்கும் இந்த பாடலை  அவரது 6 வயது மகன் தனது மழலை மொழியில் பாடியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது


 

From around the web