புற்று நோயில் இருந்து மீண்டு நடிக்க இருக்கும் சோனாலி

என்ன விலை அழகே, நெனச்சபடி நெனச்சபடி பாடல்கள் மூலம் காதலர் தினம் படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் சோனாலி பிந்த்ரே. இந்த படம் மட்டுமல்லாது அர்ஜூன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்தவர் இவர். திடீரென ஏற்பட்ட புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மீள அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். தலைமுடியை அகற்றி மொட்டை தலையுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டார். சிகிச்சை குறித்து அவர் கூறும்போது, “கைவிரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பிலும்
 

என்ன விலை அழகே, நெனச்சபடி நெனச்சபடி பாடல்கள் மூலம் காதலர் தினம் படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் சோனாலி பிந்த்ரே. இந்த படம் மட்டுமல்லாது அர்ஜூன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்தவர் இவர்.

புற்று நோயில் இருந்து மீண்டு நடிக்க இருக்கும் சோனாலி

திடீரென ஏற்பட்ட புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மீள அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார்.

தலைமுடியை அகற்றி மொட்டை தலையுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டார்.

சிகிச்சை குறித்து அவர் கூறும்போது, “கைவிரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பிலும் வலியை உணர்ந்தேன். கீமோதெரபிக்கு பிறகு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த நாட்கள் மிகவும் துயரமானது. உடலில் தொடங்கிய வலி மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது” என்றார்.

2 மாதங்களுக்கு முன்னால் குணமடைந்து நாடு திரும்பினார். இதுகுறித்து அவரது கணவர் கோல்டி பெல் கூறும்போது, “சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் சிகிச்சை முடிந்துள்ளது. நோய் திரும்பவும் வர வாய்ப்பு உள்ளதால் அடிக்கடி சோதனைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும்” என்றார்.

சில வாரங்கள் வீட்டில் ஓய்வு எடுத்த சோனாலி பிந்த்ரே மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது விளம்பர படமொன்றில் நடிக்கிறார். விரைவில் இந்தி படத்திலும் நடிக்க உள்ளார்.

From around the web