கஸ்தூரியின் பின்னால் இவ்வளவு சோகமான கதையா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது. இனி டி ஆர் பியை ஏத்த எதுவும் தயாரிப்புக் குழு செய்யத் தேவையில்லை, அவரவர் பங்குக்கு அவர்களே போதும் போதும் என்கிற அளவு செய்கின்றனர். நேற்றுடன் கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்தது, அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் பிடித்த ஆசிரியர்களைப்
 
கஸ்தூரியின் பின்னால் இவ்வளவு சோகமான கதையா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.

இனி டி ஆர் பியை ஏத்த எதுவும் தயாரிப்புக் குழு செய்யத் தேவையில்லை, அவரவர் பங்குக்கு அவர்களே போதும் போதும் என்கிற அளவு செய்கின்றனர்.

கஸ்தூரியின் பின்னால் இவ்வளவு சோகமான கதையா?

நேற்றுடன் கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்தது, அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் பிடித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூறுமாறு அறிவுறுத்தினார் பிக் பாஸ். அந்தக் கட்டளைக்கு ஏற்ப, போட்டியாளர்கள் அவர்களின் ஆசிரியர்கள் சிலர் அவர்களுடைய அம்மா என ஒவ்வொருவரும் சிலரைக் குறிப்பிட்டுப் பேசினர்.

அதில், கஸ்தூரி பேசியது மனதை துக்கத்தில் ஆழ்த்தும்படியாக இருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுவந்த தன்னுடைய மகள் தான் கஸ்தூரியின் ஆசிரியர் என்று கூறி, அழத் துவங்கினார்.

அங்கு இருக்கும் மற்ற குழந்தைகளைப் பார்க்கையில் நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும், இந்த வீட்டில் நீங்கள் போடும் சண்டை எல்லாம் மிகச் சாதாரணமான ஒன்றே ஆகும்.

தயவு கூர்ந்து இந்த மாதிரியான விஷயங்களுக்காக சண்டை போடாதீர்கள் என்பதுபோல் பேசி முடித்தார். இதனைக் கேட்ட அனைவரும் அமைதியாகினர். சேரன் துக்கம் தாளாமல் குளியலறை அருகே சென்று அழுதுவிட்டு வெளியே வந்தார்.

From around the web