இத்தனை பேர் நாமினேஷனா? வெளியே போவது யார்?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் நடக்கும் என்பது தெரிந்ததே. அந்தவகையில் நேற்று ஆயுதபூஜை கொண்டாட்டத்திலும் வழக்கமான நாமினேஷன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத இருவரின் புகைப்படங்களை எடுத்து நாமினேஷன் செய்து அதற்கான காரணத்தை கூறி அந்த புகைப்படங்களை தீயில் போட்டு எரிக்கும் நாமினேஷன் படலம் நேற்று வித்தியாசமாக நடந்தது 

தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 16 பேர்கள் உள்ள நிலையில் இதில் 11 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். பிக்பாஸ் வரலாற்றில் 11 பேர்கள் நாமினேஷன் பட்டியலில் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்

இந்த வாரம் ஆஜித், வேல் முருகன் அல்லது அனிதா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சனம்ஷெட்டியும் வெளியேற வாய்ப்பு உண்டு ஆனால் அதே நேரத்தில் இந்த வாரம் 11 பேர்கள் நாமினேஷன் பட்டியலில் இருப்பதால் ஓட்டுக்கள் சிதற வாய்ப்பு உள்ளது என்பதும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெளியேறுபவர்களின் ஓட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web