என்னையும் சினேகாவை பிரிப்பது அவர் ஒருவர்தான்: பிரசன்னா

என்னையும் எனது மனைவி சினேகாவையும் பிரிக்கும் ஒரே நபர் எங்கள் மகன் விஹான் என்றும், எங்கள் இருவரையும் சேர்ந்து உட்காரவிடாமல் மகன் விஹான் நடுவில் வந்து இருந்து கொள்வான் என்றும் நடிகரும் நடிகை சினேகாவின் கணவருமான பிரசன்னா கூறியுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா-சினேகா தம்பதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா பேசியதாவது: சினேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டபோது எனக்கு பெண்கள் மீதான மரியாதை மிகவும் அதிகரித்தது. பிரசவ வலியை பார்ப்பதற்கே எனக்கு பயமாக
 

என்னையும் எனது மனைவி சினேகாவையும் பிரிக்கும் ஒரே நபர் எங்கள் மகன் விஹான் என்றும், எங்கள் இருவரையும் சேர்ந்து உட்காரவிடாமல் மகன் விஹான் நடுவில் வந்து இருந்து கொள்வான் என்றும் நடிகரும் நடிகை சினேகாவின் கணவருமான பிரசன்னா கூறியுள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா-சினேகா தம்பதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா பேசியதாவது:

சினேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டபோது எனக்கு பெண்கள் மீதான மரியாதை மிகவும் அதிகரித்தது. பிரசவ வலியை பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையான பிரசவ வலி அறிகுறி ஏற்படவில்லை. எனவே, வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள்.

முதலில் சினேகாவை தொட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்ததும் எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது. டாக்டரம்மா நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓரமாக சென்று உட்கார்ந்து கொண்டேன்.

இப்போதும், எனக்கு தலைவலி வரும்போது எல்லாம் இதைத்தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லையென்றால் அந்த பிரசவ வலி எப்படி இருக்கும்? ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்

From around the web