பெட்டில் படுத்தவாறு மகன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட சினேகா!

புதிதாக தனது மகன் மகளுடன் அவர் பாதி தூக்கத்தில் அழகான செல்பி ஒன்றை வெளியிட்டிருந்தார். 
 
பெட்டில் படுத்தவாறு மகன் மகளுடன் புகைப்படம் வெளியிட்ட சினேகா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் சினேகா. கமல், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 

அது மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். கடந்த 2020 ஜனவரி மாதம் பிறந்த இவரது மகளுக்கு ஆத்யந்தா என பெயரிட்டார்கள்.

இந்நிலையில் பல மாதங்கள் தங்களது மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி  முதல் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ளனர் சினேகா - பிரசன்னா ஜோடி. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுருந்தனர். 

இந்நிலையில் சினேகாவின் மகள் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார். தற்போது புதிதாக தனது மகன் மகளுடன் அவர் பாதி தூக்கத்தில் அழகான செல்பி ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டு குழந்தைகளுமே தங்களது அப்பாவைப் போலவே இருக்கின்றனர்... சோ கியூட்..!

From around the web