நடு இரவில் விஜய் செய்த காரியம் ... ரகசியம் சொன்ன எஸ்.ஜே.சூர்யா

விஜய் தனக்கு நடு இரவில் போன் செய்து பாராட்டியதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
 

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.ஜெ.சூர்யா தளபதி விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ஆம், எஸ்.ஜெ.சூர்யா ஸ்பைடர் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது இரவு 11 மணிக்கு தளபதி விஜய் தொலைபேசியில் அழைத்துள்ளாராம். மேலும் அவர் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரைலரை பார்த்ததாகவும்.

பின் "எஸ்.ஜெ.சூர்யாகிட்ட விஜய் அவருக்கு பெரிய ரசிகர்னு சொல்லிடுங்க" என கூறினாராம்.


 

null


 

From around the web