யு சர்ட்டிபிகேட் வாங்கிய முதல் படம்-எஸ்.ஜே சூர்யாவின் கேலி பேச்சு

இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. முதல் படமாக வாலி படத்தை இயக்கினார். வாலி ஒரு மார்க்கமான படமாக இருந்தாலும் கொஞ்சம், காமெடி, தேவாவின் பாடல், நல்ல ரொமாண்டிக் காட்சிகள் என வைத்து படத்தின் கதை இப்படிப்பட்டதுதான் என்று தெரியாதவாறு பார்த்துக்கொண்டார். இரண்டாவதாக குஷி படம் பண்ணினார். இது வேறு பாதையில் பயணிக்கும் நல்ல கதைதான். இருந்தாலும் எஸ்.ஜே சூர்யா தனது சேட்டைகளை இப்படத்தில் காட்டினார். இடுப்பு சீன், கட்டிப்புடி கட்டிப்புடிடா போன்ற பாடல்கள் பலரை
 

இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. முதல் படமாக வாலி படத்தை இயக்கினார். வாலி ஒரு மார்க்கமான படமாக இருந்தாலும் கொஞ்சம், காமெடி, தேவாவின் பாடல், நல்ல ரொமாண்டிக் காட்சிகள் என வைத்து படத்தின் கதை இப்படிப்பட்டதுதான் என்று தெரியாதவாறு பார்த்துக்கொண்டார்.

யு சர்ட்டிபிகேட் வாங்கிய முதல் படம்-எஸ்.ஜே சூர்யாவின் கேலி பேச்சு

இரண்டாவதாக குஷி படம் பண்ணினார். இது வேறு பாதையில் பயணிக்கும் நல்ல கதைதான். இருந்தாலும் எஸ்.ஜே சூர்யா தனது சேட்டைகளை இப்படத்தில் காட்டினார். இடுப்பு சீன், கட்டிப்புடி கட்டிப்புடிடா போன்ற பாடல்கள் பலரை கவர்ந்தது. இருப்பினும் கல்லூரி மாணவர்கள் போன்றோரைத்தான் கவர்ந்ததே தவிர குடும்ப ஆடியன்ஸை கவரவில்லை.

அடுத்தடுத்து வெளியான நியூ, அ ஆ போன்ற படங்கள் எல்லாம் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. இதில் நியூ படம் முழுக்கவே ஏ சர்ட்டிபிகேட் வாங்கி இருந்தது. கிரணுக்கும் இவருக்குமான பாடல் காட்சிகள்,முறையற்ற சிறு பிள்ளை உறவு முறைகளை காமெடியாக சொல்லி இருந்தார்.

இப்படி இவர் தொடர்ந்து நடித்ததால் இவர் மீது எஸ்.ஜே சூர்யா படம் என்றாலே இப்படித்தான் என்ற நிலை செயற்கையாக உருவானது.

இப்போது மான்ஸ்டர் என்ற எலி காமெடி படத்தில் நடித்துள்ளார். நேற்று மான்ஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஜே சூர்யா நான் முதன் முதலில் நடித்திருக்கும் யு சர்ட்டிபிகேட் வாங்குன முதல் படம் இது என்ற வகையில் ஜாலியாக பேசினார்.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

From around the web