மீண்டும் செல்போன் தட்டிய பஞ்சாயத்தில் சிவக்குமார்

திரையுலகில் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக அந்தக்காலம் தொட்டே நடித்து வரும் சிவக்குமாரின் மகன்கள், சூர்யா, கார்த்தி இருவருமே சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களாக விளங்குகிறார்கள். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதம் முன்பு மதுரையில் ஒரு தனியார் கருத்தரித்தல் மையம் மருத்துவமனையை திறக்க சென்றபோது செல்ஃபி எடுத்த சிறுவனின் செல்ஃபோனை தட்டி விட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த சிறுவனுக்கு வேறொரு
 

திரையுலகில் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக அந்தக்காலம் தொட்டே நடித்து வரும் சிவக்குமாரின் மகன்கள், சூர்யா, கார்த்தி இருவருமே சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களாக விளங்குகிறார்கள்.

மீண்டும் செல்போன் தட்டிய பஞ்சாயத்தில் சிவக்குமார்

சமீப காலமாக நடிகர் சிவக்குமார் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதம் முன்பு மதுரையில் ஒரு தனியார் கருத்தரித்தல் மையம் மருத்துவமனையை திறக்க சென்றபோது செல்ஃபி எடுத்த சிறுவனின் செல்ஃபோனை தட்டி விட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த சிறுவனுக்கு வேறொரு மொபைல் ஃபோனும் வாங்கி கொடுத்தார்.

இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான ஈ.ராம்தாஸ் வீட்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகுமார். அங்கு தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


From around the web