உங்களால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்: எஸ்பிபி குறித்து சிவகுமார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், திடீரென அவர் நேற்று அபாய கட்டத்தில் உள்ளார் என்றும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் இந்த நிலையில் எஸ்பிபி குணமாக வேண்டும் என்று திரையுலகினர் அனைவரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவதுள்: எஸ் பி
 

உங்களால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்: எஸ்பிபி குறித்து சிவகுமார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், திடீரென அவர் நேற்று அபாய கட்டத்தில் உள்ளார் என்றும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் எஸ்பிபி குணமாக வேண்டும் என்று திரையுலகினர் அனைவரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவதுள்:

எஸ் பி பாலசுப்ரமணியம், நீங்கள் என்னை விட நான்கு வயது குறைவானவர் தான், அதனால் நான் உங்களை தம்பி என்றே அழைக்கிறேன். நீங்கள் ஒரு மிகச் சிறந்த பாடகர். நிறைகுடம் ஆக இருப்பவர். உங்களுடைய பாடல்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று உள்ளது. நீங்கள் எனக்காக மூன்று தெய்வங்கள் என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலைப் பாடினார்கள்.

அதன் பின்னர் எனக்கு நீங்கள் பல படங்களில் பாடினாலும் எனது நூறாவது படமான ரோஜாப்பூ ரவிக்கைகாரி என்ற படத்திற்காக பாடிய ’உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி’ என்ற பாடல் என்னால் மறக்கவே முடியாது. அந்த பாடலுக்கு நீங்கள் கொடுத்து உணர்வுகளை என்னால் தர முடியவில்லை. அதற்காக 45 நாட்கள் பயிற்சி எடுத்தேன். உங்களால் இந்த படத்தில் நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்’ என்று கூறியுள்ளார்

மேலும் எத்தனையோ சவால்களை சந்தித்த நீங்கள் இந்த கொரோனா என்ற சவாலை சந்தித்து மீண்டு வாருங்கள் என்று நடிகர் சிவகுமார் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

From around the web