இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் மனைவி கர்பமா?

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறார் என கூறுகின்றனர்.
 

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டாக்டர் படம் வரும் ரம்சான் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.

இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு ஆராதனா எனும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, இன்று நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், சிவகார்த்திகேயனுடன் வாக்களிக்க வந்த அவரது மனைவி கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் அவரும் ஷாலை வைத்து மறைத்துள்ளார். இதனால் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறார் என கூறுகின்றனர்.

From around the web