பாலாவுக்கு டைட்டில் உதவி செய்த சிவகார்த்திகேயன்: இதுதான் டைட்டில்

 

தேசிய விருது விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்கனவே மாயாவி, பரதேசி, பிசாசு, சண்டிவீரன், நாச்சியார் ஆகிய திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது அவரது நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது 

பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படத்தின் டைட்டில் ’விசித்திரன்’. இந்த படத்தை அவருடைய உதவி இயக்குனர்களில் ஒருவரான பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இந்த படத்தில் நாயகனாக ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்  


 

From around the web