பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன்: சிவகார்த்திகேயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசனாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், கடந்த சில நாட்களாக சுயதம்பட்டமும், தனது சுயநலத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. எனவே அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சூர்யா, அரவிந்தசாமி இருவரில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் பெயரும் இதில் அடிபடுகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய சிவகார்த்திகேயன், ‘பிக்பாஸ்
 
sivakarthikeyan

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன்: சிவகார்த்திகேயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசனாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், கடந்த சில நாட்களாக சுயதம்பட்டமும், தனது சுயநலத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க மாட்டார் என்றே கருதப்படுகிறது.

எனவே அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சூர்யா, அரவிந்தசாமி இருவரில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் பெயரும் இதில் அடிபடுகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய சிவகார்த்திகேயன், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டிப்பாக தொகுத்து வழங்க மாட்டேன். எனது அனுபவத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவிட்டேன்.

இப்போதுதான் சினிமாவில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றேன். நான் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் தொலைக்காட்சிக்கு செல்ல விருப்பமில்லை என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

From around the web