இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்....

தேசிங் திருமணம் முடிந்த சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக அவர்களது இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்

 
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்....

தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தேசிங்கு பெரியசாமி. 

கடந்த வருடம் துல்கர் சல்மான், ரித்து வர்மா, இயக்குனர் கௌதம் மேனன், விஜே ரக்ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு திருமணம்நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.  அடிப்படையில் நிரஞ்சனி ஆடை வடிவமைப்பாளர். ’வாயை மூடி பேசவும்’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘பென்சில்’, ‘கதகளி’, ’கபாலி’ உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றியிருக்கிறார். 

அவருக்கு குக் வித் கோமாளி பிரபலம் கனி மற்றும்  நடிகை விஜயலட்சுமி என இரு  சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் தேசிங் மற்றும் நடிகை நிரஞ்சனியின் அழகிய திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக அவர்களது இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதுபற்றி பதிவிட்டுள்ள நிரஞ்சனி கூறும் பொழுது "ஒரு மனிதன் இவ்வளவு நல்லவராகவும், 

தாழ்மையுடனும் இருக்க முடியுமா. எங்களுடன் பகிர்ந்து கொண்ட அன்பான வார்த்தைகளுக்காகவும், இந்த அழகிய தருணங்கள்காகவும் மிக்க நன்றி" என்று கூறியுள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web