உடல் எடை குறைத்து ஒல்லியான சிவகார்த்திகேயன்...
சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
Tue, 9 Feb 2021

சின்னத்திரை ஒரு காமெடி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சிவகார்த்திகேயன். பின் படிப்படியாக முன்னேறி தொகுப்பாளராக அந்த தொலைக்காட்சியிலேயே பணியாற்றினார்.
பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார். இப்படி சினிமாவில் சாதித்து உயர்ந்த சிவகார்த்திகேயனை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள்.
இவரது டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது, அந்த படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியே வர அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் மிகவும் உடல் எடை குறைத்துள்ளது தெரிகிறது.