மீண்டும் அனிருத்துடன் இணையும் சிவகார்த்திகேயன்: டைட்டில் அறிவிப்பு!

 

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள மற்றொரு படமான ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளன

டாக்டர் படம் வரும் ஏப்ரல் மாதமும் அயலான்  படம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது

sivakarthikeyan

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ’டான்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படம் மிகச் சிறந்த என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த வீடியோ ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

From around the web