தீபாவளி அப்டேட் தந்த சிவகார்த்திகேயன்: இன்று இரட்டை விருந்து!


 

 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் சிங்கிள் பாடல் என இந்த தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருதுகள் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் அப்டேட்டும் இன்று வெளிவர உள்ளது. இன்று காலை 11 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் டாக்டர் படத்தின் இரண்டு அப்டேட்டுகள் வரவிருப்பதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்

doctor update

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகிய இருவரும் உரையாடும் உரையாடலில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. மேலும் காமெடியான இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் படத்தின் இரண்டு அப்டேட்டுகள் இன்று ஒரே நாளில் வெளி வர இருப்பதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு இன்று இரட்டை விருந்து கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்


 

From around the web