டான் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் டான் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்து பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். இன்று அவர் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.

அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட பூஜை மற்றும் ஷூட்டிங் சமீபத்தில்  கோயம்புத்தூரில் துவங்கியது. அதேபோல் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பிரதானமாக படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. 

மேலும்  அடுத்த 30 நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் தான் 70 சதவீத படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க டான் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். உடன் குக் வித் கோமாளி ஷிவாங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web