'டாக்டர்’ ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்!

 

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே 

அந்த வகையில் தற்போது 'டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் 

doctor release

'டாக்டர்’ திரைப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்

கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web