பயந்து கொண்டே சிவாஜியிடம் நடிப்பை கேட்டு வாங்கிய கமல்- தேவர் மகன் சுவாரஸ்யம்

இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.அது தேவர் மகன் படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய காணொளி அது. தேவர் மகன் பட காட்சி ஒன்றில் சிவாஜி கணேசன் நடித்த காட்சி அந்த படத்தின் இயக்குனர் பரதனுக்கு திருப்தியாக இல்லையாம். நல்லா இல்லேன்னு பரதன் ஓப்பனாக கமலிடம் சொல்லி விட்டாராம். போய் சொல்லுங்க இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாராம். அத எப்டிங்க நான் சொல்றது நீ வெளியூர்ல இருந்து வந்துருக்க
 

இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.அது தேவர் மகன் படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய காணொளி அது.

பயந்து கொண்டே சிவாஜியிடம் நடிப்பை கேட்டு வாங்கிய கமல்- தேவர் மகன் சுவாரஸ்யம்

தேவர் மகன் பட காட்சி ஒன்றில் சிவாஜி கணேசன் நடித்த காட்சி அந்த படத்தின் இயக்குனர் பரதனுக்கு திருப்தியாக இல்லையாம். நல்லா இல்லேன்னு பரதன் ஓப்பனாக கமலிடம் சொல்லி விட்டாராம். போய் சொல்லுங்க இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாராம்.

அத எப்டிங்க நான் சொல்றது நீ வெளியூர்ல இருந்து வந்துருக்க நான் எப்டி சொல்றதுன்னு தயங்கினாராம் கமல், பரதன் நெருக்கடிகொடுக்க , சிவாஜி தனக்கேயுரிய பாணியில் சிம்மக்குரலில் என்னப்பா நல்லா இல்லையா என கேட்டு விட்டாராம். டக்கென்று பரதனும் ஆமா நல்லா இல்லை. என கூறி விட்டாராம்.

டக்கென்று சமாளித்த கமல் அண்ணே நீங்க நடிச்சது பெரிய தேவரா இல்ல சின்ன தேவராதான் இருந்தது இன்னும் கொஞ்சம் பெரியவரா வந்தா நல்லா இருக்கும்னு சொன்னாராம் வரும் போ என சிவாஜி கர்ஜனையாக சொன்னாராம். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சிவாஜி நடித்து கொடுத்தாராம்.

From around the web