சினிமாவிற்கு வருவதற்கு முன் விஜய்யுடன் சிவா எடுத்த புகைப்படம்
சினிமாவிற்கு வருவதற்கு முன் விஜய்யுடன் சிவா எடுத்த புகைப்படம் தற்போது வைராலாகி வருகின்றது.
Thu, 18 Feb 2021

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அயலான், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் தளபதி விஜய் போலவே சிறு குழந்தைகள் முதல் முதியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதனை நடிகர் விஜய் வெளிப்படையாகவே விருது வழங்கும் விழா ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் தனது இளம் வயதில் தளபதி விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.