நாளை வெளியாகிறது சிங்கிள் ட்ராக்!

"காத்து வாக்குல ரெண்டு காதல்" என்ற திரைப் படத்தின் சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகிறது!
 
"நடிகர் விஜய் சேதுபதியின்" ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து

கடந்த பொங்கல் அன்று நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் "மாஸ்டர்". இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக தோன்றி அசர வைத்திருப்பார். அதுவும் குறிப்பாக அவர் "பவானி" என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.தற்போது தான் நடிக்க இருக்கும் திரைப்படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்". இத்திரைப்படத்தினை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கஉள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் "நடிகை நயன்தாரா" நடிக்க இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. "இயக்குனர் விக்னேஷ் சிவன்", "நடிகர் விஜய் சேதுபதி" மற்றும்  "நடிகை நயன்தாரா" இவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் "நானும் ரவுடிதான்". தற்போது இவர்கள் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

kaathu vaakula rendu kaadhal

மேலும் இத்திரைப்படத்தில் "தெறி"," கத்தி", "மெர்சல்" போன்ற வெற்றிப் படங்களின் கதாநாயகியாக "நடிகை சமந்தா" இவர்களுடன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்களும், நடிகை நயன்தாராவின் ரசிகர்களும், நடிகை சமந்தாவின் ரசிகர்களும் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "அனிருத்" இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. "நானும் ரவுடிதான்" என்ற திரைப்படத்திற்கு  "அனிருத்" இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இத்திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் நாளை வெளியாகும் என நடிகர் விஜய் சேதுபதி  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு கருத்து கொண்டுள்ளனர். நாளைய தினம் "காதலர் தினம்" என்பதால் இப்பாடல் லவ்வர்ஸ்க்கு  சர்ப்ரைஸ் கொடுக்கும் என பேசப்பட்டு வருகிறது.

From around the web