நான் நலமாக உள்ளேன், கவலை வேண்டாம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் காவல்துறையினர் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் திரையுலகினர் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது இதுகுறித்து எஸ்பிபி வெளியிட்ட
 

நான் நலமாக உள்ளேன், கவலை வேண்டாம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் காவல்துறையினர் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் திரையுலகினர் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இதுகுறித்து எஸ்பிபி வெளியிட்ட வீடியோவில் நான் நலமாக உள்ளேன். எனக்கு காய்ச்சல், சளி இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்ததில் மிகவும் லேசான கொரோனா பாதிப்பு இருந்ததை தெரிந்து கொண்டேன். அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். சளி, காய்ச்சல் தவிர வேறு எந்த பிரச்சனையும் இன்றி நான் நலமாக உள்ளேன். எனவே யாரும் கவலை கொள்ள வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

From around the web