பின்னணி பாடகி ஜானகிக்கு எலும்பு முறிவு

பிரபல பின்னணி பாடகி ஜானகி. கேரளாவை பூர்விகமாக கொண்ட ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். பொன்வானம், பன்னீர் தூவுது இந்நேரம், கண்ணன் வந்து பாடுகிறான்,நெஞ்சினில் நெஞ்சினிலே உள்ளிட்ட தேனினும் இனிய பாடல்களை இவர் பாடியுள்ளார். இவரது உறவினர் வீடு மைசூருவில் உள்ளது. கடந்த 3 நாள் முன்பு மைசூருவிற்கு வந்த எஸ்.ஜானகி உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் கால்
 

பிரபல பின்னணி பாடகி ஜானகி. கேரளாவை பூர்விகமாக கொண்ட ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

பின்னணி பாடகி ஜானகிக்கு எலும்பு முறிவு

பொன்வானம், பன்னீர் தூவுது இந்நேரம், கண்ணன் வந்து பாடுகிறான்,நெஞ்சினில் நெஞ்சினிலே உள்ளிட்ட தேனினும் இனிய பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இவரது உறவினர் வீடு  மைசூருவில் உள்ளது. கடந்த 3 நாள்  முன்பு மைசூருவிற்கு வந்த எஸ்.ஜானகி உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு  குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் கால்  தவறி கீழே விழுந்தார்.

இதில்  அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு  முறிவு ஏற்பட்டது. இதற்காக அவரை மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை  செய்தனர்.  இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஜானகிக்கு  இடுப்பு எலும்பில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் அவர் முழுமையாக குணமடைவார்” என்றார்.

From around the web