6வது முறையாக பாடகி ஜானகி குறித்த வதந்தி: மகன் விளக்கம்

பழம்பெரும் பின்னணி எஸ்.ஜானகி அவர்களின் உடல்நிலை குறித்து இன்று மாலை திடீரென சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் வதந்தி பரவியது. இதனால் ஜானகியின் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஆனால் ஜானகியின் உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகன் முரளிகிருஷ்ணா உறுதி செய்துள்ளார் இதுகுறித்து மேலும் கூறியபோது ’அம்மாவிற்கு சிறிய அளவிலான
 

6வது முறையாக பாடகி ஜானகி குறித்த வதந்தி: மகன் விளக்கம்

பழம்பெரும் பின்னணி எஸ்.ஜானகி அவர்களின் உடல்நிலை குறித்து இன்று மாலை திடீரென சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் வதந்தி பரவியது. இதனால் ஜானகியின் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

ஆனால் ஜானகியின் உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகன் முரளிகிருஷ்ணா உறுதி செய்துள்ளார்

இதுகுறித்து மேலும் கூறியபோது ’அம்மாவிற்கு சிறிய அளவிலான ஆப்ரேஷன் ஒன்று நடந்துள்ளது தற்போது அவர் உடல் நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். அம்மா முழு உடல் நலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடகி எஸ். ஜானகி ஐதராபாத்தில் நலம் என இசையமைப்பாளர் தினா, பாடகர் எஸ். பி.பி ஆகியோர்களும் உறுதி செய்துள்ளனர். ஜானகி உடல்நிலை குறித்து ஏற்கனவே ஐந்து முறை வதந்தி பரவிய நிலைய்ல் இன்று ஆறாவது முறையாக வதந்தி பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web