பாடகி சித்ராவின் உருக்கமான பதிவு: சோகமான ரசிகர்கள்!

 

பிரபல பின்னணி பாடகி சித்ரா தனது குழந்தையுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று இருந்தார். அப்போது அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் அவருடைய குழந்தை விழுந்து மரணம் அடைந்தது இந்த சம்பவம் அவருடைய வாழ்க்கையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் சித்ரா தனது மகளின் பிறந்தநாள் இன்று என உருக்கமாக பதிவு செய்துள்ளார். தனது மகள் நந்தனா தன்னைவிட்டு பிரிந்தாலும் அவர் இன்னும் தன்னுடனே வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு இருப்பதாகவும் தனது குழந்தைக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவு செய்துள்ளார் 

chithra baby

மேலும் தனது குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சித்ராவின் பதிவிற்கும் சோகமான ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறுவதுடன் அந்த குழந்தைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

சித்ரா வாழ்க்கையில் நடந்த இந்த மறக்க முடியாத நிகழ்வு அவரது ரசிகர்களுக்கும் சோகமான ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது

From around the web