நடிகர் விக்ரம் படத்தில் இணைந்த சிம்ரன்...

நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். 

 

விக்ரம் 60-வது படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை கிளப்பி உள்ளது. காரணம் என்னவென்றால் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் முதல்முறையாக தனது தந்தையுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். 

நடிப்பு அசுரனான விக்ரமும் அவரது மகனும் ஒரு சேர  திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங் பகுதியில் மார்ச் 3ஆம் தேதி துவங்கியிருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் நடிகை வாணி போஜன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது 90ஸ் பேவரைட் நாயகியான சிம்ரன் இணைந்துள்ளார். 1997-ம் ஆண்டு விஐபி படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்ரன். தனது நடிப்பாலும், நடனத் திறமையினாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார். 

மேலும் அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்திருக்கும் அவர் பல விருதுகளை பெற்றுள்ளார். தனது திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். முக்கியமாக பேட்ட, சீமராஜா, பாவக்கதைகள் போன்ற படங்களில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அடுத்ததாக அவர் நடிகர் பிரசாந்துடன் 'அந்தகன்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்குப் பிறகு விக்ரம் மற்றும் துருவ் நடிக்கும் இந்த படத்திலும் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web