திடீரென சிம்பு எடுத்த ஆன்மீக முடிவு: மாநாடு தள்ளிப்போகுமா? 

 

சிம்பு நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் திரையில் வெளியாக தயாராக உள்ளது என்பதும் வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள 7ஜி சிவா அவர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு தீவிரமாக உள்ளார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென நடிகர் சிம்பு ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து உள்ளார் 

simbu latest

ஒவ்வொரு ஆண்டும் சிம்பு தவறாமல் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வரும் நிலையில் இந்த ஆண்டும் அவர் இரண்டு வேண்டுகோளுக்காக சபரிமலை செல்கிறார் என்றும் தனது படங்கள் வெற்றி பெற வேண்டும் தனக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளுக்காக ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து உள்ளதாக தெரிகிறது

சிம்பு ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து உள்ளதால் அவர் மலைக்கு போய்விட்டு திரும்பும் வரை மாநாடு படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பில்லை என்றும் மாநாடு படத்தின் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

From around the web