சிம்புவின் அடுத்த படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’

 
சிம்புவின் அடுத்த படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’

ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குள் அவர் முடித்து விடுவார் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் ஜனவரியில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தின் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாகவும் கமல் நடித்த வேடத்தில் தான் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 

sigappu rojakkal

இந்த படம் குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்தப் படம் சிம்புவின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web