சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

 
maanadu

பிரபல நடிகர் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நிறைவான மகிழ்வில் #மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.#maanaadu

ஏற்கனவே தீபாவளி என்று ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் அஜித்தின் வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படமும் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இந்த படத்தை சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, உள்பட பலர் நடித்து உள்ளார்கள் என்பதும் யுவன்சங்கர்ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web