சிம்புவின் அட்டகாசமான போட்டோஷூட்: இணையதளங்களில் வைரல் 

 

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்து பார்ப்பதற்கு கண்றாவியாக இருந்ததால் அவரது நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் உள்பட ஒருசில படங்களில் அவரது உருவத்தை பார்த்து அவரது ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர் 

இந்த நிலையில் அடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்னால் தன்னுடைய உடலை பெருமளவு குறைக்க வேண்டும் என தீவிரமாக உடற்பயிற்சி செய்தார் சிம்பு. கேரளாவில் அவர் உடற்பயிற்சி செய்ததாகவும் இதனை அடுத்து அவர் ஸ்லிம்மாக மாறி விட்டதாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் தற்போது அவர் தனது ஸ்லிம் தோற்றத்தில் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். கருப்பு வெள்ளையாக இருக்கும் இந்த புகைப்படங்களில் சிம்பு, நீண்ட தாடியுடன் ஸ்லிம் உடலமைப்புடன் அட்டகாசமாக உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து அவர் கன்னட படமான ‘முஃப்தி’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதுமட்டுமின்றி சுமார் 8 இயக்குனர்களிடம் சிம்பு கதை கேட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

From around the web