லீக்கான சிம்புவின் மாநாடு சூட்டிங் புகைப்படம்... பிரமாண்ட செட்...

தற்போது படத்திற்காக போடப்பட்ட பெரிய மாநாடு செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

சிம்பு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தவர்.

சிறு வயதில் இருந்தே நடிக்க வந்தவர், நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாடல் பாடுவது, எழுதுவது, இசைப்பது, படம் இயக்குவது என பல திறமைகளை வெளிக்காட்டி அதில் வெற்றிக்கொடியும் நாட்டியுள்ளார்.

இடையில் அவர் சினிமாவில் மிகவும் ஆக்டீவாக இல்லாமல் இருந்தார்.

ஆனால் இந்த கொரோனா லாக் டவுனில் தனது உடல் எடையை குறைத்து அப்படியே பழைய லுக் சிம்புவாக மாறியிருக்கிறார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ரசிகர்கள் சிம்பு நடிப்பில் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் மாநாடு.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வர தற்போது படத்திற்காக போடப்பட்ட பெரிய மாநாடு செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு ரசிகர்கள் வேகமாக அந்த செட் புகைப்படம் ஷேர் செய்து வருகிறார்கள்.


 

From around the web