இன்று முதல் சிம்புவின் மாநாடு மீண்டும் தொடக்கம்: ரசிகர்கள் உற்சாகம்

 

சிம்பு நடித்த திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாகவே சரியாக வெளிவரவில்லை என்பதால் அவரது ரசிகர்களை அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் உற்சாகத்துடன் வந்த சிம்பு ஒரு சில நாட்களிலேயே ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அந்த படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாகவும், படம் பொங்கலன்று வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிம்பு நடித்து வந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது 

புதுச்சேரியில் நடைபெற உள்ள இன்றைய படப்பிடிப்பில் சிம்பு மற்றும் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 40 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இதில் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 

சிம்புவின் ஈசுவரன் படம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மற்றொரு படமான மாநாடு திரைப்படமும் மிக விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சிம்பு நடித்துள்ள மஹா என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

From around the web