சிம்பு உடல் எடை குறைப்பு ரகசியம்: தங்கை இலக்கியாவின் டுவீட்

 

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்து இருந்த நிலையில் அவரது படங்கள் தோல்வி அடைந்தது மட்டுமன்றி அவரது ரசிகர்களே அவரது உடல் எடை கொடுத்து அதிருப்தியில் இருந்தனர்

இதனால் முதல் கட்டமாக தனது உடல் எடையை பாதியாக குறைக்க அவர் முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் கேரளாவுக்கு சென்று தீவிர உடற்பயிற்சி செய்து மூலிகை வைத்தியம் செய்து உடலை குறைத்தார். இப்போது அவர் பத்து வருடங்களுக்கு முன் இருந்த ஸ்லிம் சிம்புவாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தநிலையில் அவர் உடல் எடை குறைந்ததின் ரகசியம் என்ன என்பது புரியாத புதிராக இருந்த நிலையில் சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள்".

இவ்வாறு இலக்கியா தெரிவித்துள்ளார்.


 

From around the web