எனக்கு கல்யாணம் ஆகனும்... நாயிடம் புலம்பும் சிம்பு? செம வைரல்!

ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா? என புலம்பும் சிம்பு.
 

அண்மைக்காலமாக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் கச்சிதமாக தோற்றமளிக்கிறார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகி உள்ளனர்.

சிம்புவின் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் திரைப்படம் அண்மையில் வெளியாகி அவருடைய ஆதர்ச ரசிகர்களுக்கு பெரும் மன நிறைவை கொடுத்தது. தற்போது மாநாடு மற்றும் பத்து தல படப்பிடிப்புகளில் சிம்பு பிசியாக இருக்கிறார். எனினும் அவ்வப்போது தமது சொந்த யூடியூப் சேனல் மட்டும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் சிம்பு அடிக்கடி பதிவுகளை போடுவது உண்டு.

குறிப்பாக காதலர் தினமான இன்று அவர் தமது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் வளர்ப்பு நாயுடன் சிம்பு பேசுகிறார். அதில்,  “நீ ஒரு பெண்ணினம்.. நீ வளர்ந்து ஒரு ஆண் இனத்தை பார்த்து பழக வேண்டும். அதனுடன் உறவு உண்டாக வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் முதலில் எனக்கு திருமணம் ஆக வேண்டும். நான் கல்யாணம் ஆகாமல் இருக்கிறேன் என்னும் போது நீ ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்க முடியாது. பிறகு என் மீது கோபித்துக்க கூடாது. அதனால்  நீ செய்ய வேண்டியதெல்லாம், இரவு முழுவதும் அமர்ந்து எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அப்போது தான் உனக்கு நடக்க வேண்டியதும் நடக்கும்.  என் கஷ்டம் உனக்கு புரியுதா? என்ன அப்படி பார்க்கிறாய் .. எனக்கு திருமணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” எனப் புலம்புகிறார். இறுதியில் ‘தங்கம்’ என அந்த செல்ல நாயுடன் சிம்பு கொஞ்சுகிறார். அதுவும் அவருடன் கொஞ்சுகிறது.

From around the web