சிம்புவின் பெரியார் குத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா?

தமிழ் சினிமாவுலகில் அதிக சர்ச்சையில் சிக்கியவர் சிம்பு என்றால் அது மிகையாகாது. பீப் பாடல் உள்பட பல சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு தற்போது பெரியார் குத்து’ என்ற தனிப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பெரியாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. சிம்பு பாடிய பெரியார் குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசைமைத்துள்ளார். மதன் கார்க்கி படல் வரிகளில் அமைத்துள்ள இந்த ஆல்பத்தை தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரிக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர்
 

சிம்புவின் பெரியார் குத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா?

தமிழ் சினிமாவுலகில் அதிக சர்ச்சையில் சிக்கியவர் சிம்பு என்றால் அது மிகையாகாது. பீப் பாடல் உள்பட பல சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு தற்போது பெரியார் குத்து’ என்ற தனிப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பெரியாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சிம்பு பாடிய பெரியார் குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசைமைத்துள்ளார். மதன் கார்க்கி படல் வரிகளில் அமைத்துள்ள இந்த ஆல்பத்தை தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரிக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவின் பெரியார் குத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா?தமிழகத்தில் பெரியார் என்ற பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு உள்ளது. சமீபத்தில் பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கிளம்பிய எதிர்ப்பு நாடே அறிந்தது. எனவே சிம்புவின் இந்த பாடலில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்று கூறப்படுகிறது.

ஆனால் எதிர்ப்புகளை சமாளிப்பது என்பது சிம்புவுக்கு தெரியாத வித்தையல்ல. அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் வரை அவரை யாராலும் அசைக்க முடியாது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web